ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
கயல் படத்தில் நடித்து வரும் ஆனந்தி. ரக்ஷிதா என்ற பெயரில் தெலுங்கு படங்களில் நடித்தவர். பொறியாளன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். கயல் வெளிவருவதற்கு முன்பே இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
தற்போது ஆனந்தி வெற்றி மாறன் சோதனை முயற்சியாக எடுத்து வரும் ஒரு மணி நேர படமான விசாரணை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இதனை வெற்றிமாறன் உறுதிபடுத்தியிருக்கிறார்.
விசாரணை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஹீரோயின் இல்லாமல் முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. இதில் கலந்து கொண்டு ஆனந்தி நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் வெற்றிமாறன் சூதாடி படத்தை துவக்குகிறார்.