இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
நிமிர்ந்து நில் படத்தையடுத்து தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் சுராஜ் இயக்கும் படம் என 3 படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. இதில் சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆக்சன், லவ், காமெடி கலந்த ஒரு ஜனரஞ்சகமான வேடத்தில் நடிக்கிறாராம்.
அதோடு, இந்த படத்தில் ரஜினி, அஜீத், விஜய் படங்களில் அவர்கள் ஒரு ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுப்பது போன்று ஜெயம் ரவியும் ஒரு பாடலோடுதான் என்ட்ரி ஆகிறாராம். ஏற்கனவே அதிரடியாக நடனமாடக்கூடியவர் ஜெயம்ரவி என்பதால். இந்த பாடலில் அவரது நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த பாடலை சமீபத்தில் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சென்று படமாக்கியுள்ளனர். அதோடு, ஜெயம்ரவி- புரோட்டா சூரி இருவரும் நடிக்கும் சில காமெடி காட்சிகளும் படமாக்கப்பட்டதாம். ஏற்கனவே தில்லாலங்கடி உளளிட்ட சில படங்களில் காமெடி செய்திருந்தாலும், இந்த படத்தில் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் காமெடி காட்சிகளில் பின்னி எடுத்துள்ளாராம் ரவி. கூடவே சூரியும் அவருடன் போட்டி போட்டு நடித்ததால் இந்த படத்தில் தனது காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகும் என்று எதிர்பார்க்கிறார் ஜெயம்ரவி.