பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
விஜயசேதுபதி- கிருஷ்ணா இணைந்து நடித்துள்ள படம் வன்மம். இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருக்கிறார். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டதோடு, படமும் தற்போது அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து ரிலீசுககு தயார் நிலையில் உள்ளது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஜீவா, மெட்ராஸ் படங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் உடனடியாக அந்த படத்தை வெளியிட முடியவில்லையாம். அதோடு, தீபாவளிக்கு சில மெகா படங்கள் திரைக்கு வருவதால், தீபாவளிக்கு பிறகு வன்மம் படத்தை வெளியிடுகிறார்களாம்.
அதோடு, இந்த வன்மம் படத்தை தயாரித்துள்ள நேமிசந்த் ஜெபக் தயாரித்துள்ள இன்னொரு படமான மீகாமன் படவேலைகளும் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. ஆர்யா, ஹன்சிகா நடித்துள்ள இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று அந்த கம்பெனி வட்டாரத்தை விசாரித்தபோது, முதலில் தயாரித்த படம் வன்மம்தான். அதனால் அந்த படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் மீகாமன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்கிறார்கள்.
ஆக, விஜயசேதுபதியின் வன்மத்திற்கு பிறகுதான் மீகாமன் ஆர்யா தியேட்டருக்கு வருகிறார்.