ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
வடிவேலு நடித்த படங்களில் அவர் பேசி நடித்து பிரபலமான வசனங்கள் சமீபகாலமாக சில படங்களுக்கு தலைப்பாக வைக்கப்பட்டு வருகிறது. வின்னர் படத்தில் கைப்புள்ளயாக நடித்த வடிவேலு சிலரை கூட்டு சேர்த்துக்கொண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நடத்தி வருவார். அதைதான் சிவகார்த்திகேயன் நடித்த படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வைக்கப்பட்டது.
அதையடுத்து, மேலும் சில படங்களுக்கு அவரது பிரபலமான வசனங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வடிவேலு பேசி இன்றைக்கும் இளவட்டங்கள் பேசிக்கொண்டிருக்கும் வந்துட்டான்ய்யா வந்துட்டான்ய்யா என்ற வார்த்தையை தற்போது ஒரு படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். அந்த படத்தில் புதுமுகங்கள் நடித்தபோதும், டைரக்டர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம்.
கதைப்படி, ஒரு காட்சியில் வயதான தோற்றத்தில் தோன்றும் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் இருவரும் நாம் மீண்டும் இளமையாக மாறினால் எப்படி இருககும் என்று நினைத்துப்பார்ப்பது போன்று ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருக்கிறதாம். அந்த காட்சியில் இன்றைய இளவட்டங்கள் அணிந்து செல்வது போன்ற ஜீன்ஸ் டீசர்ட் அணிந்தபடி பீட்சா, பர்கர் என சாப்பிட்டபடி லேப்டாப், செல்போன் என்று அலைவது போன்ற அந்த பாடலில் நடித்துள்ளார்களாம். இநத பாடலிலும் வந்துட்டான்யா வந்துட்டான்யா என்ற வார்த்தை அடிக்கடி ரிப்பீட்டு செய்யப்படுகிறதாம்.