‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி இயக்குனர் பைசல் சைஃப் இயக்கி உள்ள படம் மெயின் கோன் ரஜினிகாந்த். இதில் ஆதித்யாமேனன், கவிதா ராதேஷ்யாம் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் என் பெயரில் வெளிவரும் இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் படத்துக்கு தடைவிதித்தது. மேலும் படத்தை ரஜினிக்கு போட்டுக்காட்டவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மெயின் கோன் ரஜினிகாந்த் படத்தை ரஜினியும் அவரது மகள் சவுந்தர்யாவும் இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மினி தியேட்டரில் பார்க்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை படத்தின் இயக்குனர் பைசல் சைஃப் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினி சாரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சீன்கூட படத்தில் கிடையாது. அதற்காக அவருக்கு படத்தை போட்டு காட்டுகிறேன். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். படம் பார்த்த பிறகு இதனை ரஜினிசார் உணர்வார் என்று நம்புகிறேன்" என்கிறார் பைசல்.