நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள இதில் விஷால், ஹன்சிகா நடிக்கிறார்கள். அதோடு ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியார் விஷாலின் அத்தைகளாக நடிக்கிறார்கள். அத்தைகளுக்கு ஆளுக்கு ஒரு மகள் இருப்பதாகவும். தங்கள் மகளையே விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மூன்று அத்தைகளும் போட்டி போடுகிற மாதிரியான கதை. ரம்யா கிருஷ்ணன் மகளாக ஹன்சிகா நடிக்கிறார், மற்ற இருவரின் மகள்களாக தெலுங்கு நடிகைகள் மதுரிமா மற்றும் மாதவி லதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் மதுரிமா தமிழில் சேர்ந்து போலாமா, இ.பி.கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மாதவி லதா தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களையும் சேர்த்து விஷாலுக்கு மூன்று ஹீரோயின்கள், மூன்று அத்தைகள்.