சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது முன்னணி கதாநாயகிகளிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. சமந்தா, தமன்னா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த போட்டி நடிப்பில் மட்டும் இல்லாமல், கிளாமர் விஷயத்திலும் இருப்பதுதான் பெரிய விஷயமே. இதனால், ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. பொதுவாகவே தெலுங்குத் திரையுலகில் ஹீரோயின்களுக்கான ஆடை அலங்காரங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். தமிழ்ப் படங்களை விட தெலுங்கில் ஹீரோயின்களின் ஆடை விஷயத்தில் தனி கவனம் செலுத்துவார்கள். அதில் கிளாமரான ஆடைகளும் அதிகம் இருக்கும்.
மகேஷ் பாபு, தமன்னா நடித்து நேற்று வெளிவந்த 'ஆகாடு' படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் முழுவதும் தமன்னா அவருடைய அழகான தோற்றத்தாலும், கிளாமரான ஆடையாலும் வந்து அசத்தினாலும், ஸ்ருதிஹாசன் ஒரே ஒரு பாடலில் தமன்னாவை ஓவர் டேக் செய்துவிட்டார் என்கிறார்கள். தமன்னா படம் முழுவதும் கஷ்டப்பட்டு நடித்து பெயர் வாங்கினாலும், ஒரே பாடலில் மொத்த ரசிகர்களையும் ஸ்ருதிஹாசன் ஈர்த்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று திரையுலகினரே பாராட்டுகிறார்களாம்.
இப்படி நடக்கும் என்று தெரிந்ததுதான் தமன்னா, இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனருடனும், நாயகன் மகேஷ் பாபுவுடனும் சண்டை போட்டாரோ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.