'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
பெண் சிங்கம் படத்தினை முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் ரசித்து பார்த்தார். முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் பெண் சிங்கம். பாலி ஸ்ரீரங்கம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத அளவு அசத்தல் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரீலிசுக்கு தயாராகி வரும் நிலையில் அதன் பிரிவியூ காட்சியை முதல்வர் கருணாநிதி, தனது குடும்பத்தாருடன் பார்த்து ரசித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் தியேட்டரில் வெளியிடப்பட்ட பிரிவியூ காட்சியை முதல்வர் கருணாநிதியுடன், ராசாத்தி அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், செல்வி செல்வம், கனிமொழி எம்.பி., கவிப்பேரரசு வைரமுத்து, உதயநிதி ஸ்டாலின், ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் நா.ஜெயமுருகன், தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாரிப்பாளர் ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன், டைரக்டர் பாலிஸ்ரீரங்கம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் அனைவரும், ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமான திரைக்கதை இது. ஜனரஞ்சமாக சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் ஜெயிக்கும், என்று கூறி பாராட்டினார்கள்.