‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் அதனை போட்டு லைக்குளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியின் தீவிர ரசிகரான கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் லிங்காவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு "முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசையாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். தினேஷ் கார்த்திக்கின் டுவிட்டரை ஃபாலோ செய்கிறவர்களில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லரும் ஒருவர். அவர் லிங்கா போஸ்டரை லைக் செய்து "மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்கு பதலளித்த தினேஷ் கார்த்திக் "உங்களிடமிருந்த இதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் படத்தை பார்க்க நீங்களும் தயாராக இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.