ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த படங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜயின் படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து வெளியான படங்களை ஆர்வமுடன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் விளைவு... விஜய்யின் அடுத்த படத்தில் நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியிலோ அல்லது திரையரங்க உரிமையாளர்களுக்காக ஒரு படத்தை நடித்துத் தரும் முடிவிற்கோ வர வேண்டும் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொடுக்காவிட்டால் விஜய் படத்துக்கு தடை போடும் முடிவிலும் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர். இதுசம்பந்தமாக வரும் சனிக்கிழமை (22ம்தேதி) தியேட்டர் அதிபர்கள் சென்னையில் கூடி முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம். இறங்கி வருவாரா விஜய்?!