‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அக்ராஸ் தி ஹால் என்ற ஆங்கிலம் படம் ஒன்று 2009ம் ஆண்டு வெளிவந்தது. அலெக்ஸ் மெர்கின் இயக்கி இருந்தார். மைக் வோகல், பிரிட்டனி மர்பி, டன்னி பினோ நடித்திருந்தனர். தான் உயிராக நேசிக்கும் காதலி ஒரு ஓட்டலில் இன்னொருவனுடன் இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் காதலன், அவளை தீர்த்துக்கட்ட அதே ஓட்டலின் எதிர் அறையில் தங்குகிறான். காதலியுடன் எதிர் அறையில் இருப்பது அவனது உயிருக்கு உயிரான நண்பன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை ஒரு ஓட்டல், இரண்டு அறைகளின் சம்பவங்களை வைத்து அந்த திரைக்கதை பின்னப்பட்டிருக்கும்.
இந்த கதையை அப்படியே காப்பி அடித்து உன்னோடு ஒரு நாள் என்ற ஒரு படத்தை எடுத்தார்கள். துரை கார்த்திகேயன் என்பவர் இயக்கி இருந்தார். அர்ஜூன், ஜிப்ரான், நீலம் என்ற புதுமுகங்கள் நடித்திருந்தார்கள். சென்ற ஆண்டு இந்தப் படம் வெளிவந்தது.
இதே கதையை காப்பி அடித்து கலைப்புலி எஸ்.தாணு தன் அண்ணன் மகன் பார்த்தி நடிக்க நேர்எதிர் என்ற பெயரில் தயாரித்தார். ஜெயபிரதீப் என்பவர் இயக்கி இருந்தார். ரிச்சர்ட் ஐஸ்வர்யா நடித்திருந்தார்கள். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீசானது.
இப்போது அதே அக்கராஸ் தி ஹால் படத்தை காப்பி அடித்து கபடம் என்ற படம் வருகிறது. இது வருகிற 22ந் தேதி ரிலீசாக இருக்கிறது. சோழா கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோதிமுருகன் என்பவர் இயக்கி உள்ளார். சச்சின், அங்கனாராய், ஆதித்யா நடித்துள்ளனர்.
மூன்று படங்களுமே சிற்சில மாற்றங்களுடன் அக்கிராஸ் தி ஹால் படத்தின் அப்பட்டமான தழுவல். திரைக்கதைக்காக பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் மூன்று தமிழ் படமாக வெளிவந்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.