மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
அறிமுகமான 3 படத்திலேயே ஒய் திஸ் கொலவெறி என்ற மெகா ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத். அதையடுத்து எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். விளைவு, தற்போது விஜய்யின் கத்தி படத்திற்கும் இசையமைத்து உயர்ந்து நிற்கிறார் அனிருத்.
இதில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியைப்பொறுத்தவரை தனுஷின் நடிப்பு, அனிருத்தின் இசை இரண்டையும் சினிமா உலகைச்சேர்ந்த பிரபலங்களே புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். குறிப்பாக முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் மாறுபட்ட நடிப்பைக்கொடுத்திருக்கிறார் தனுஷ். படித்து விட்டு வேலை வெட்டி இல்லாமல் அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு அலையும் காட்சிகளில் தனுஷை தவிர இத்தனை சிறப்பாக யாரும் நடிக்க முடியாது என்று வெளிப்படையாக பாராட்டுகின்றனர்.
அதேபோல், அனிருத் தனது பாடல்கள் மூலம் பட்டைய கெளப்பியிருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள. இப்படி பலரும் கூறியுள்ள நிலையில, சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், தனுசின் நடிப்பும், அனிருத்தின் இசையும் என்னை கவர்ந்து விட்டன என்று தன் பங்குக்கு புகழ்ந்திருக்கிறார். இதனால் மேற்படி சுள்ளான்கள் இருவருமே சந்தோசத்தின் உச்சத்தில மிதந்து கொண்டிருக்கிறார்கள்.