ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கன்னட நடிகர் அம்ரிஸ், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். மத்திய, மாநில அமைச்சராகவும் இருந்தார். கோடீஸ்வர நடிகர்களில் ஒருவர். தமிழ் நடிகை சுமலதாவின் கணவர். கோடிக் கணக்கில் சொத்து இருந்தும், பணம் இருந்தும் மக்கள் பணத்தில் மருத்துவ செலவு செய்தது இப்போது வெளிவந்திருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்ரிஸ் சிறுநீரக பிரச்சினை நோயால் அவதிப்பட்டார். பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசெபத் மருத்துவனைக்கு (ரஜினி சிகிச்சை பெற்ற இடம்) அழைத்து செல்லப்பட்டு அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று குணமாகி திரும்பினார். மருத்துவ செலவான ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணித்திலிருந்து செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பணத்தை அவரிடமிருந்து திரும்ப பெறுமாறு மாநில அரசு அரசு பணியாளர் மற்றும் சீர்திருத்த துறைக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அந்த துறை அம்ரிஸுக்கு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.