ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தாமிரபரணி படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. கோவையை களமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்ட ஹரி, இப்போது சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார். விஷால், வில்லன் நடிகர் முகேஷ் திவாரி மோதும் காட்சிகள் கடந்த சில தினங்களாக காரைக்குடி மலைப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. அப்போது, ஒரு பாறையின் மேல் இருந்து முகேஷ் மீது விஷால் குதிப்பது போன்ற ஷாட் படமாக்கப்பட்டபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முகத்திலும், கையிலும் அடிபட்டு விட்டதாம்.
ஏற்கனவே சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதும் கையில் தகரம் கிழித்து காயம் ஏற்பட்டது. ஆக, பூஜை படத்தில் இது விஷாலுக்கு இரண்டாவது விபத்து ஆகும். இருப்பினும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் வாங்கும் அடி ஒவ்வொன்றும் எனது வெற்றிக்கான அறிகுறிதான என்கிறார்.
அதாவது, சண்டக்கோழி, மலைக்கோட்டை படங்களில் நான் நடித்தபோது இப்படித்தான் பலமுறை அடி வாங்கினேன். ஆனால் அப்படி ரத்தம் கொட்டி நான் நடித்த படங்கள் இரண்டுமே மெகா ஹிட்டாகி உள்ளன. அதனால் இந்த படத்தின் வெற்றி நான் வாங்கும் அடியில் இருந்தே உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறார் விஷால்.