தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சமீபகாலமாக ஆர்யாதான் நட்புக்காக சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம், நம்பியார் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். அதோடு அப்படி நடிப்பதற்கு சம்பளம்கூட அவர் வாங்கவில்லையாம். ஆர்யாவின் இந்த இலவச சேவை தயாரிப்பாளர்கள் மத்தியில் அவரது பெயரை ரொம்ப உசரத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது. அவரைத் தொடர்ந்து இப்போது விஜயசேதுபதியும் நண்பர்களுக்காக உதவிக்கரம் நீட்டி வருகிறார். இவரும் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதையடுத்து இப்போது தினேஷ் நாயகனாக நடித்துள்ள திருடன் போலீஸ் என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.
தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் நடனமாடாத விஜயசேதுபதி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்தான் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதையடுத்து இந்த படத்தில் வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு செமத்தியான குத்தாட்டம் ஆடியிருக்கிறார். கூடவே ஒரு அயிட்டம் நடிகையும் அவருடன் கலந்து கட்டி ஆடியிருக்கிறார். பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இப்படி இன்னொரு நடிகரின் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பது விஜயசேதுபதியின் புகழை கோடம்பாக்கத்தில் உயர்த்திக்கொண்டே வருகிறது.