இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? |
அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால்போதும், கால்ஷீட் கிடைத்தவருக்கு சுலபமாக மினிமம் ஐந்து கோடி லாபம் கிடைத்துவிடும். தற்போதைய சூழலில் அஜித்தின் கால்ஷீட் என்பது ஹாட் கேக். வணிக தரத்தில் முன்னணியில் இருக்கும் அஜித் ஏ.எம்ரத்னத்துக்கு ஆரம்பம் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே அவருக்கே அடுத்தப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் அப்படம் தற்போது வளர்ந்து வருகிறது. ஒரு முன்னணி நடிகர் அடுத்தடுத்து ஒரே தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுப்பது என்பது மிக அபூர்வமான அரிதான சம்பவம். சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்கோ அது ஜாக்பாட். அஜித் புண்ணியத்தில் ஏ.எம்.ரத்னத்துக்கு ஜாக்பாட் அடித்தது.
இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில், ஒரு படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார் என்றும், அதில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. இதை எல்லாம் வைத்து திரையுலகில் ஒரு கிசுகிசு அடிபடுகிறது. முன்பு நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடன் கூட்டணி வைத்து சைலண்ட் பார்ட்னராக படம் பண்ணியதுபோல், தற்போது ஏ.எம்.ரத்னத்துடன் பார்ட்னர் ஆகிவிட்டார் அஜித். அதனால்தான் தொடர்ந்து அவருக்கே கால்ஷீட் கொடுக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.