ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
துப்பாக்கி படத்தையடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி அமைத்துள்ள படம் கத்தி. அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து ஹீரோ, வில்லன் என விஜய் இரண்டு கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர், போஸ்டர் ஆகியவை கடந்த 22-ந்தேதி விஜய்யின் 40வது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஆனபோதும், சில ரசிகர்கள் அந்த பர்ஸ்ட் லுக் டீசர், தி வேர்ட்ஸ் என்ற ஆங்கில படத்தின் டீசரை காப்பியடித்து உருவாக்கப்பட்டிருப்பதாக இணையதளங்களில் கருத்து பரிமாறிக்கொண்டனர். அதோடு, படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரமும் அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டிருநத விளம்பரத்தின் வடிவில் இருப்பதாகவும் கமெண்ட்ஸ் அடித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்தது கத்தி யூனிட். அதையடுத்து, அப்பட டைரக்டரான ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கத்தி படத்தின் டீசர் மற்றும் விளம்பரத்தை நாங்களே சுயமாக யோசித்து செய்ததுதான். ஹாலிவுட் படத்தைப்பார்த்து வடிவமைக்கவில்லை என்று மறுத்துள்ளார். மேலும், இந்த படத்தின் கதைக்கும், தினசரி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு தொடர்பு உள்ளது. அதன்காரணமாகவே பத்திரிகை செய்திகளை விளம்பர போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. இதை செய்வதற்கெல்லாம் காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மாதிரியான கதைகள் என்கிறபோது யாராக இருந்தாலும் இந்த மாதிரிதான் போஸ்டரை வடிவம் செய்வார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.