ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பிரபல கன்னட நடிகை, மற்றும் இயக்குனர் ரூபா அய்யர். ஸ்ரேயா, கணேஷ் வெங்கட்ராம் நடித்த சந்திரா என்ற படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். பல படங்களுக்காக விருதுகள் பெற்றுள்ளார். ரூபா அய்யர் இயக்கிய சந்திரா படத்தின் இசை அமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவ். இருவரும் இணைந்து பணியாற்றியபோது அவர்களிடையே காதல் மலர்ந்தது. காதலுக்கு தற்போது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பெங்களூருவில் உள்ள ரூபா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற ஆகஸ்ட் மாதம் 6ந் தேதி திருமணம் நடக்கிறது.
இதுகுறித்து ரூபா அய்யர் கூறும்போது: நான் நிறைய பேசுவேன். கவுதம் ரொம்ப அமைதியானவர். இந்த முரண்பாடே எங்களுக்குள் காதலை உருவாக்கியது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பிறகே திருமண முடிவை எடுத்து பெற்றவர்களிடம் சொன்னோம். அவர்கள் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்கிறோம். என்றார்.