போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதை பார்த்த பலருக்கு அதிர்ச்சி. பர்ஸ்ட் லுக் விளம்பரம், தி வோர்ட்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வருமானவரித்துறை வெளியிட்ட விளம்பரம் ஒன்றும் இதே பாணியில் இருந்தது.
கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ டீசர். 2010ம் ஆண்டு ஷபா நியூஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி. அதில் அமெரிக்க நகரங்களை செய்திதாள் வடிவில் காட்டியிருப்பார்கள். கத்தியில் சென்னையின் முக்கியமான கட்டிடங்களை செய்திதாள் வடிவில் காட்டியிருக்கிறார்கள்.
"படத்தின் கதைக்கும், தினசரி பத்திரிகை செய்திகளுக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. அதை குறிக்கும் விதமாகத்தான் இந்த விளம்பரம் டிசைன் செய்யப்பட்டதே தவிர எதையும் பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறது படத் தரப்பு.
துப்பாக்கி படம் வெளியான போது அப்போது வெளியிடப்பட்ட போஸ்டரில் விஜய், காஜல் அகர்வாலை தூக்கியிருப்பது போன்ற போஸ்டர், ஆன் ஆபிஸர் அண்டு எ ஜென்டில்மேன்” என்னும் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.