போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அட்டகத்தி பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மெட்ராஸ். கேத்ரீன் தெரசா ஹீரோயின். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், முரளி இசை அமைக்கிறார். வட சென்னையை மையமாக கொண்ட படம். வடசென்னையின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தி அந்த பகுதியில் உள்ள நார்த் இண்டியன் பெண்ணான கேத்ரீனாவை காதலிக்கிறார். அவருக்கு வரும் ஒரு பிரச்னையிலிருந்து அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இதன் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு, எட்டிட்டிங் பணிகள் தொடங்கி விட்டது. அடுத்த மாதம் (ஜூலை) படம் வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த மாதம் 23ந் தேதி பாடல்களை வெளியிடுகிறார்கள்.