‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தி.நகர், அகம் புறம், காசேதான் கடவுளடா படங்களை இயக்கியவர் திருமலை. நெல்லை சந்திப்பு, மான்வேட்டை படங்களை தயாரித்தார். தற்போது திருமலை ஹீரோவாகிவிட்டார். அவர் அடுத்து இயக்க இருக்கும் மலேசிய நண்பர்கள் என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை அறிமுகம் ஷெரின் நடிக்கிறார்.
பிழைப்புக்காக மலேசியா செல்லும் தமிழ் நாட்டு இளைஞன் மலேசிய நாட்டு மக்களே மெச்சுகிற அளவுக்கு ஒரு காரியத்தை செய்கிறானாம். அது என்ன என்பதுதான் படத்தின் கதையாம். திருமலையோடு மலேசிய நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரே மாதத்தில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.