தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
மலையாளத்தில் மோகன்லால்- மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். இப்படம் 100 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் அப்படத்தின் ரீமேக் தற்போது பல மொழிகளிலும் தயாராக உள்ளது. முதல் கட்டமாக அப்படத்தை பி.வாசு கன்னடத்தில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.
அதில் கன்னட ரவிச்சந்திரன்-நவ்யா நாயர் ஜோடி சேர்ந்துள்ளனர். அதேபோல், இப்படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க சரியான நடிகை செட்டாக வில்லையாம். அதனால், மலையாளத்தில் அந்த கேரக்டரில் நடித்த ஆஷா சரத்தையே கன்னடத்திலும் நடிக்க வைத்திருக்கிறார் வாசு.
காரணம், அப்படத்தில் மோகன்லால் ரோலுக்கு இணையான ஒரு பவர்புல் வேடத்தில் ஆஷா நடித்திருந்தாராம். அவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததோடு, கதைக்கு பெரிய பலமாக அமைந்ததாம். அதனால் அந்த கேரக்டரை அவரை தவிர முழுமையாக வேறு நடிகைகளால் செய்து விட முடியாது என்றுதான் ஆஷாவை புக் பண்ணியுள்ளாராம் பி.வாசு.
ஆக, த்ரிஷ்யம் கன்னட ரீமேக் மூலம் மலையாள சினிமாவில் இருந்து வெளியே வந்திருக்கும் ஆஷா, அடுத்தபடியாக தமிழில் கமல் நடிப்பில் தயாராகயிருக்கும் அப்படத்தின் ரீமேக்கிலும் நடிக்க தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசிக்கொண்டிருக்கிறாராம், தற்போது உத்தமவில்லன் படத்தில் நடித்து வரும் கமல், த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும்போது அதுபற்றிய முடிவு சொல்வதாக ஆஷாவிடம் கூறியிருக்கிறார்களாம். ஆக, த்ரிஷ்யம் ரீமேக் மூலம் ஆஷா தமிழிலும் என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.