‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழில் தலைப்பிடும் சினிமாக்களுக்கு தொடர்ந்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும். ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறைக்கு தமிழக அரசு ஏற்கனவே ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது திரைப்பட தொழிலுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மேலும் பல சலுகைகள் திரைத்துறைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.