Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவின் ஒருநாள் சாப்பாட்டு செலவு 35 ஆயிரம்!

22 மே, 2014 - 17:23 IST
எழுத்தின் அளவு:

முன்னணி கதாநாயகி நடிகையான சமந்தா கடந்த சில வருடங்களாக சருமநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா, இந்தப்பிரச்சனை காரணமாக இரு படங்களிலிருந்து கடைசி நேரத்தில் விலகினார். பின்னர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா அதன் பிறகே தமிழ் தெலுங்குப் படங்களில் மறுபடி நடிக்கத் தொடங்கினார். சரும நோயினால் பாதிக்கப்படுள்ள சமந்தாவிடம், உணவுமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மட்டுமே இந்த சருமா நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இல்லை என்றால் சருமநோய் உடம்பு முழுக்க பரவிவிடும் ஆபத்து உள்ளது. என்று டாக்டர்கள் எச்சரிகை செய்தனராம். எனவே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்கிறார் சமந்தா.


படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது அங்கே வழங்கப்படும் உணவுகளை சமந்தா சாப்பிடுவது இல்லை. ஹோட்டல் சாப்பாடும் சாப்பிடுவதில்லை. தனக்கான உணவை தன் கண் முன்னாலேயே சமைத்துக் கொடுப்பதற்காக சமையல்காரர் ஒருவரையும் படப்பிடிப்புக்கு அழைத்து வருகிறார். சமந்தா உண்ண வேண்டிய உணவை சமைப்பதற்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வருகிறார் அந்த சமையல்காரர். சமந்தா கேட்கும்போதெல்லாம் அவருக்கு தேவையான உணவை அவ்வப்போது சமைத்துக் கொடுக்கிறார்.


இப்படி பத்திய சாப்பாடு சாப்பிட ஆரம்பித்த பிறகு சமந்தாவுக்கு சருமநோய் மட்டுப்பட்டுள்ளதாம். தன்னுடைய ஸ்பெஷல் சாப்பாட்டு செலவுக்காக படப்பிடிப்பு நாட்களில் தயாரிப்பாளர்களிடமிருந்து ஒருநாளைக்கு 35 ஆயிரம் வசூலித்து வருகிறார் சமந்தா. ஒரு நாளைக்கு 35 ஆயிரமா? என்று ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், இப்போது தினமும் சமந்தாவின் சாப்பாட்டுக்காக 35 ஆயிரம் கொடுக்க பழகிவிட்டனராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in