ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சாக்லேட் ஹீரோ என்ற இமேஜூடன் பல ஆண்டுகளாக கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருந்த ஜெயம்ரவி, இடையிடையே ஆக்ஷன் கதைகளிலும் நடித்துக்கொண்டுதான் இருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் கிக் பாக்சராக நடித்தார். அதையடுத்து பேராண்மையிலும் ஆக்சன் ரோலில் நடித்த ஜெயம்ரவி, இப்போது பூலோகம் படத்திலும் வடசென்னை கிக் பாக்சராக நடித்துள்ளார்.
மேலும், முந்தைய படத்தை விட இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.அதற்காக தனது பாடியை பக்கா கிக் பாக்சராக மாற்ற வேண்டும் என்பதற்காக, சில மாதங்களாக ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து தனது உடல் எடையை குறைத்து கரடுமுரடான கெட்டபுக்கு மாறி நடித்திருக்கிறார். அப்படம் இந்த மாதம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், தற்போது அவர் நடித்து வரும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் சிக்ஸ்பேக் எக்ஸ்பட்டாக நடித்துள்ளார். சினிமா ஹீரோக்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களுக்கு சிக்ஸ் பேக் வைப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனை கூறும் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. அப்படி அவரிடம் சிக்ஸ்பேக் ஆலோசனை கேட்பதற்கு சில நிஜ சினிமா ஹீரோக்களே வருவது போன்றும் படமாக்குகிறார்களாம். அப்படி கெஸ்ட் ரோலில் வந்து செல்வதற்கு சில முன்னணி ஹீரோக்களிடம் அப்படத்தின் டைரக்டரான லஷ்மண் பேசிவருகிறாராம்.