ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் காமெடியனாக நடித்து வந்தபோதும் தன்னை ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பார் பிரேம்ஜி. விளைவு, இப்போது அவரே மாங்கா என்றொரு படத்தில் செம பில்டப் கொடுத்தபடி ஹீரோவாகி விட்டார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு வேடங்களில் ஆக்டு கொடுத்துள்ளார்.
இந்த படத்தை முதலில் 2 கோடி பட்ஜெட்டில் தயாரித்து விட நினைத்தார்களாம். ஆனால், பட்ஜெட் எகிறி டபுள் மடங்காகி விட்டதாம். பிரேம்ஜியின் முதல் படம் என்பதோடு தங்கள் நிறுவனத்துக்கு முதல் படம் என்பதால் அந்த தயாரிப்பாளர் நல்ல செலவு பண்ணி படத்தை எடுத்து விட்டாராம். அதைத் தொடர்ந்து இப்போது டப்பிங் பணிகள் நடக்கிறது.
இந்த நேரத்தில், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்குமிடையே ஏதோ கருத்து மோதல் வெடித்து டப்பிங் பணிகள் இழுபறியில் கிடக்கிறதாம். இதையடுத்து இந்த பிரச்னையை இயக்குனர் சங்கத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளாராம் தயாரிப்பாளர். இதனால் முதல் படம் எதிர்பார்த்ததைவிட பிரமாண்டமாக வளர்ந்து விட்டது. அடுத்து படத்தை வெளியிட்டு தனக்கு பெரிய அளவில் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யச்சொல்ல வேண்டியதான் என்று ஆர்வமுடன் காத்திருந்த பிரேம்ஜி, இந்த திடீர் சிக்கலால் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு திரிகிறார்.