‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இளைஞர்களை பெருமளவில் கவர்ந்து இருக்கும் ஆஹா கல்யாணம் திரை படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு சென்னையில் இன்று முடிவடைந்தது. படத்தின் நாயகன் நானி படத்தை பற்றி பேசும் போது இந்த படமும் படப்பிடிப்பு நடந்த அந்த நாட்களும் என்னால் மறக்கவே முடியாதது . நாயகி வாணியுடன் பணியாற்றியதும் ஒரு கல்யாணம் போலவே இனிமையான அனுபவம் .அவரது உற்சாகமும் , அதில் அடங்கிய சக்தியும் அவருக்கு மிக பெரிய பலமாகும் . உக்கிரமான வெயில் நாட்களிலும் , படத்தின் வண்ணதை கூட்டும் வகையில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஒளி விளக்குகளின் மத்தியில் படமாக்கபட்ட போதும் , கடுமையான நடன அசைவுகளின் போதும் சற்றும் களைப்பு அடையாமல் அவர் பணியாற்றியது வியப்புக்குரியது.
சமீபத்தில் அவருக்கு கிடைத்த பிலிம்பேர் பத்திரிகையின் சிறந்த புது முகம் என்ற பெயரும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நீங்கா இடம் கிடைக்கும் என்பது நிதர்சமான உண்மை . இயக்குனர் கோகுல் கிருஷ்ணா , எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு என்ன வேண்டுமோ , அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும் அவரை மிக பெரிய இயக்குனராக அடையாளம் காட்டுகிறது .
ஆஹா கல்யாணம் படத்தை பற்றி பேசும் போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் பற்றி பேசாமல் முடிக்க முடியாது .நான் யாஷ் ராஜ் அவர்களின் காதல் படங்களை பார்த்து வளர்ந்தவன் . இன்று அந்த நிறுவனித்தில் ஒரு படத்தில் கதாநயாகனாக நடிக்கிறேன் என்றால் அது நான் செய்த பாக்கியமே . நான் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். நடிக நடிகையர் தேர்வாகட்டும் , படப்பிடிப்பு நடத்தும் நேர்த்தியும் , திட்டமிடுதலும், படத்தை பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யும் செயல் திட்டமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று தன நினைவுகளை சொல்லி முடித்தார் இளம் பெண்களை பெருமளவில் கவர்ந்து உள்ள நானி . காதலர்களுக்கு உகந்த மாதமான பிப்ரவரி மாதமே இந்த படம் வெளி வருவது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் என்கிறது திரை உலக வட்டாரம் .