‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஓகே ஓகே படத்துக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். நயன்தாரா, சந்தானம், சூரி, சாயாசிங்கும் நடித்துள்ளனர். இது ரொமான்டிக் காமெடிப் படம். சுந்தரபாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்துள்ளார். படம் வருகிற 14ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாகிறது.
சமீபத்தில் படத்தை பார்த்த உதயநிதிக்கு ஏகப்பட்ட திருப்தியாம். ஓகே ஓகேவை விட சூப்பராக வந்திருப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இதனால் உதயநிதி இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு சுமார் 15 லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரை பரிசாக வழங்கி உள்ளார். இதற்கு முன் ஓகே ஓகே படத்தை டைரக்ட் செய்த ராஜேஷ் எம்மிற்கும் உதயநிதி கார் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.