‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தன்னுடன் இதற்கு முன்பு நடித்த எந்த நடிகைகளுக்கும் கொடுக்காத அளவுக்கு இப்போது மான்கராத்தேயில் நடித்துள்ள ஹன்சிகாவுக்கு மரியாதை கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். படப்பிடிப்புக்கு ஹன்சிகா வந்து இறங்கினாலே ஓடிவந்து வரவேற்பதை வழக்கமாக கொண்டிருந்த சிவா, நடித்து முடித்து விட்டு அவர் விடைபெறுகிறார் என்றால் கார் வரைக்கும் சென்று வழியனுப்பி வைப்பாராம்.
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பில் ஹன்சிகா தன்னருகே அமர்ந்திருக்கும்போது அவர் ஏதாவது பேச வேண்டுமே என்று பேசினாலும், அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பாராம். கூடவே, ஹன்சிகா எழுந்தால் தானும் எழுவது, நடந்தால் தானும் நடப்பது என்றிருந்த சிவகார்த்திகேயன், அவரை பெயரைச்சொல்லியே அழைப்பதில்லையாம். ஜி என்றுதான் மரியாதை நிமித்தமாக அழைத்து வந்தாராம்.
அதைப்பார்த்த ஹன்சிகா, இப்படி அழைப்பதால் நான் என்னவோ உங்களை விட ரொம்ப வயதானவர் போல் தெரிகிறது. நானும் யூத்துதான். அதனால் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் சொன்னாராம். ஆனபோதும், அதன்பிறகு, ஹன்சிகா ஜி என்று ஜியை விடாமல் மெயின்டயின் பண்ணினாராம். அதனால் ஜிக்கு இது எவ்வளவோ மேல் என்று அதன்பிறகு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாராம் ஹன்சிகா.
அதோடு, படம் ஆரம்பித்த நேரம், ஹன்சிகாவின் அழகு, பர்பாமென்ஸ் குறித்து சிவகார்த்திகேயன் அள்ளி விட்டு வந்தது போன்று, இப்போது தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் சிவகார்த்திகேயனைப்பற்றி, ஹன்சிகாவும் புகழ்ந்து பேசுகிறாராம். இப்ப இருக்கிற இளவட்ட நடிகருங்கள்ல சிவாதான் பெஸ்ட். சீக்கிரமே பெரிய ஹீரோவாகிடுவார் என்று கூறும் ஹன்சிகா, அவருக்குத்தான் எம்மேல எவ்ளோ மரியாதை. இப்படி இதுவரைக்கும் என்னை எந்த ஹீரோவும் மதிச்சதில்ல என்றும் அதே போன்ற மரியாதைக்கு மீண்டும் தான் ஏங்குவதுபோலவே பேசுகிறாராம் ஹன்சிகா.