‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேனல் 4 வெளியிட்டது. இது தமிழ் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்போது பாலசந்திரன் கதையை புலிப்பார்வை என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் இயக்குகிறார். 100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி பாலச்சந்திரன் போன்ற தோற்றம் கொண்ட சிறுவனை கண்டுபிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார். நேற்று (ஜனவரி 14) முதல் இதன் ட்ரைய்லரை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.