7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
கமல் நடித்த படம் என்றாலே எப்படியாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. 1980-90களில் கமல் நடித்த பெருவாரியான படங்களில் முத்தக்காட்சி இடம்பெற்று வந்ததால், அதற்காகவே தியேட்டர்களுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு.
அந்த அளவுக்கு கதைக்கு அவசியமான இடத்தில் உடன் நடிக்கும் கதாநாயகிக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முத்தக்காட்சியில் நடித்திருப்பார் கமல். கே.பாலசந்தர் இயக்கத்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில்கூட மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சியில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டு முத்தத்தை கொடுக்கும் கமல், அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில் நடித்ததாககூட அந்த சமயங்களில் பெரிய டாக்காக இருந்தது.
ஆனால், நாளடைவில், முத்தக்காட்சிகள் கமல் படங்களில் இடம்பெறுவது குறைந்தது. இடையிடையே அதை செய்து வந்தவர், இப்போது விஸ்வரூபம்-2 படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் தூக்கலாக இருப்பதால், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பு கூட்டியுள்ளாராம். இப்படத்தில் பூஜாகுமார், ஆண்ட்ரியா என இரண்டு அதிரடி நாயகிகள் இருப்பதால், கவர்ச்சி, ரொமான்ஸ், முத்தக்காட்சி என்று எந்த குறையும் இல்லாமல் கலகலப்பாகவும், கிளுகிளுப்பாகவும் விஸ்வரூபம்-2 தயாராகியுள்ளதாம்.
ஆக, விஸ்வரூபம் முதல் பாகத்தில் துப்பாக்கியை நீட்டி சூடு காட்டிய கமல், இரண்டாம் பாகத்தில் உதட்டில் முத்தத்தை ஊட்டி தித்திப்பான சூடு காட்டி நடித்திருக்கிறாராம்.