ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலை வாரிசு ராதாரவி. தமிழ் சினிமாவில் ஏராளான படங்களில் நடித்துள்ளார். சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, வில்லன் என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் கலக்கிய ராதாரவி, தனது 61 வயது நிறைவடைந்ததை அடுத்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சஷ்டியப்தபூர்த்தி விழாவை நடத்தினார். நடிகர் ராதாரவிக்கும் அவரது மனைவி பாக்யலட்சுமிக்கும் கோயிலில் உள்ள நந்தி மேடையில் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர்கள் சரத்குமார், வாகை சந்திரசேகர், வாசுவிக்ரம், நடிகைகள் ராதிகா, நளினி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.