போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தொடர்ச்சியாக நகரத்து கதைகளிலேயே நடித்து வந்த அஜீத், நீண்ட இடைவெளிக்கு பின், 'வீரம்' படத்தில், கிராமத்து கதையில் நடித்துள்ளார். மேலும், பேன்ட்-, டி-சர்ட்டுக்கு விடை கொடுத்து விட்டு, வேஷ்டி, சட்டைக்கு மாறியுள்ளார். இந்த படத்திற்காக, முதன் முறையாக மாட்டு வண்டி ஓட்டியபடி நடித்துள்ளார் அஜீத். இதற்காக, மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரிடம், சில நாட்கள் பயிற்சி எடுத்து, மாடுகளின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டு, அதன்பின்,தான் மட்டுமே வண்டியில் அமர்ந்து, மாடுகளை ஓட்டிச் சென்றபடி நடித்தாராம். தான் நடிக்கும் ஒவ்வொரு படக்குழுவுக்கும், தன் கையாலேயே உணவு பரிமாறும் வழக்கம் கொண்ட அஜீத், இந்த முறை, 'வீரம்' படத்தின் பெரும்பகுதி, படப்பிடிப்பு நடைபெற்ற ஒடிசா மாநிலத்திலுள்ள, ஒரு கிராம மக்கள், ஆயிரம் பேருக்கு, தன் கையாலேயே உணவளித்தாராம்.