தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
உலக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருப்பவர் ஜாக்கிசான். எத்தனை ஆக்சன் ஹீரோக்கள் மொழிவாரியாக உதயமாகிக்கொண்டிருந்தாலும், ஜாக்கிசானை வீழ்த்த இன்னும் ஒரு ஆக்சன் ஹீரோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் கொள்ளை கொண்டு வைத்திருக்கிறார் ஜாக்கி.
இந்நிலையில், இதுவரை நடிப்பதோடு மட்டுமே தனது எல்லையை வைத்திருந்த அவர், தனது நடிப்பில் உலகமெங்கும் வெற்றி நடைபோட்ட போலீஸ் ஸ்டோரி என்ற படத்தின் 2ம் பாகமான போலீஸ் ஸ்டோரி 2013 என்ற படத்தில் முதன்முறையாக ஒரு பாடல் பாடியிருக்கிறார். இதுவரை பாட்டு பாட வேண்டும் என்ற ஆசையே துளியும் இல்லாமல் இருந்த ஜாக்கிசானை, சமீபகாலமாக வளர்ந்து வரும் ஹீரோக்களே பாடி தங்களது பன்முகத்தை காட்டுகிறார்கள். உலக அளவில் வளர்ந்து நிற்கும் நீங்கள் பாடாமல் இருந்தால் எப்படி என்று கட்டாயப்படுத்தி பாட வைத்தார்களாம்.
மேலும், இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை பொங்கலுக்கு தமிழகமெங்கும் சுமார் 200 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம். ஆக, பொங்கலுக்கு விஜய், அஜீத் படங்கள் வருகிறது என்ற அச்சத்தில் பல தமிழ்ப்படங்களே விலகி நிற்கும் நிலையில், ஜாக்கிசான், மிஷின் கன்னோடு மிரட்டலாக பொங்கலுக்கு களமிறங்குகிறார். ஏற்கனவே அவரது போலீஸ் ஸ்டோரி ஆக்ஷன் மிரட்டல் என்பதால், இந்த படத்தில் இன்னும் அதிரடியான சண்டை காட்சிகளை வைத்து படத்தையும் 3டியில் வெளியிடுகிறார்களாம்.