ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நடிகை த்ரிஷா டூ-பீஸ் உடையில் நடிக்க ஆசை இல்லை என்று தெரிவித்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா - த்ரிஷா நடிக்கும் படம் சர்வம். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவில் ஆர்யா, த்ரிஷா, இயக்குனர் விஷ்ணுவர்தன், இசையமைப்பாளர் யுவன், தயாரிப்பாளர்கள் ஐங்கரன் கருணாமூர்த்தி, நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய த்ரிஷாவிடம் ஒரு நிருபர், காதலர் தின கொண்டாட்டம் தேவையாதானா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த த்ரிஷா, இந்தியாவில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க... இதெல்லாம் ஒரு பிரச்னையா? இதனை பெரிது படுத்தவே கூடாது, என்றார்.
நீச்சல் உடையில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த த்ரிஷா, எனக்கு டூ-பீஸ் உடையில் நடிக்க விருப்பம் இல்லை. அதேநேரம் அப்படி நடிப்பவர்களை குறைகூறவும் விருப்பம் இல்லை, என்றார். அருகில் இருந்த ஆர்யாவோ... அதிகம் பேசாமல், த்ரிஷாவின் பதில்களை கூர்ந்து நோக்கியபடியே இருந்தார்.