பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
நஸ்ரியா திரைக்கு வந்தபோது, முன்னணி நடிகைகளுக்கு கொடுத்ததை விட, அதிகப்படியான ஷாக் கொடுத்து வருகிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா.காரணம், பென்சில் படத்துக்கு ப்ரியா ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென, அவரை விட ஸ்ரீதிவ்யா நன்றாக இருப்பார் போலிருக்கே என்று, இவரை புக் பண்ணினர்.அதேபோல், சுந்தர்.சி, இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தின் முதல் பாகத்தில், விமலுக்கு ஜோடியாக அஞ்சலி தான் நடித்திருந்தார். ஆனால், இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், விமலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறாராம்.
இதுகுறித்து, சுந்தர்.சி, தரப்பில் இன்னும் செய்தி வெளியிடப்படாத போதும், அஞ்சலி இப்போதைக்கு தமிழுக்கு வர வாய்ப்பில்லை என்பதால், ஸ்ரீதிவ்யாவுக்கே சாதகமான சூழ்நிலை உள்ளது என்கின்றனர். ஸ்ரீதிவ்யாவின் இந்த அசுரவேக வளர்ச்சி, மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கோலிவுட்டில், பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களின் கதைகளை தேர்வு செய்வதில், ரொம்பவும் கவனமாக இருக்கிறாராம், ஸ்ரீதிவ்யா.