போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அருந்ததீ படம் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா சமீபகாலமாக சவாலான வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபாலி போன்ற சவாலான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இரண்டாம் உலகம் படம் வெளியாகியுள்ளது. இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி...
* இரண்டாம் உலகம் படத்தில், சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளீர்களே?
ஆமாம், அது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஜார்ஜியாவில் உள்ள சண்டை பயிற்சி மாஸ்டரிடம், 15 நாட்கள் பயிற்சி எடுத்து, சண்டை காட்சிகளில் நடித்தேன். படம் பார்த்த பலரும், இதற்காக, எனக்கு பாராட்டு தெரிவித்தனர்.
* ஆர்யாவிற்கு யோகா சொல்லிக் கொடுத்தீங்களாமே?
நான் ரொம்ப வருஷமா யோகா கத்துக்கிட்டிருக்கேன், அப்பப்போ நிறைய பேர் கேட்பாங்க. கொஞ்சம் சொல்லி தருவேன். ஆனால், ஆர்யாவுக்கு சொல்லிக் கொடுத்ததாக கூறுவது பொய். ஆர்யா என்னை விட பிட்டா இருக்கார், உடற்பயிற்சி செய்து, உடம்பை சரியா வச்சிட்டு இருக்கார்.எதுக்கு அவருக்கு நான் சொல்லித் தரணும்? அது வெறும் வதந்தி தான்.
* ஆர்யாவும், நீங்களும் நல்ல நெருக்கமான நட்பில்இருக்கீங்க. நயன்தாராவும் இருக்காங்க எப்படி இது?
உண்மையா சொல்லணும்னா, ஆர்யா பற்றி நிறைய பேர் ஏதேதோ சொல்வாங்க. ஆனா, ஆர்யா ரொம்ப நல்ல நண்பர். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். அவருடன் முதல் முதலா நடிக்கும்போது, அவரின் கடுமையான உழைப்பை பார்த்து, ஆச்சரியப்பட்டேன். நிச்சயம் ஆர்யாவை எல்லா பெண்களுமே விரும்புவாங்க. அவ்ளோ நல்ல கேரக்டர் ஆர்யா. அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு, ரொம்ப ஒத்துழைப்பு கொடுப்பார்.
* தமிழ் ரசிகர்கள் உங்ககிட்டே என்ன எதிர்பார்க்குறாங்கனு நினைக்கிறீங்க?
என் முகம், அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பிடிச்சிருக்கு, அது இல்லாம, ஒரு நல்ல சினிமாவை தான் அவங்க விரும்புறாங்க. அது அனுஷ்கானு இல்ல, வேறு யாரா இருந்தாலும்.
* தமிழில் குறைவாகவும், தெலுங்கில் அதிக படங்களிலும் நடிக்கிறீங்களே?
அப்படி எல்லாம் இல்லை. இரண்டு மொழிகளிலும் கதை கேட்கிறேன். எந்த கதை எனக்கு பிடிக்குதோ, அதை ஒத்துக்கிறேன். மற்றபடி, இரண்டு மொழிகளுமே எனக்கு பிடித்தது தான்.