‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆட்டோகிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோபிகா. கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்மகன் உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கோபிகா, `மார்க்கெட்' உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் அகிலேஷ். இவர், அயர்லாந்தில் டாக்டராக இருக்கிறார். கடந்த வருடம் (2008) ஜுலை 27ம் தேதி இவர்கள் திருமணம் கேரளாவில் நடந்தது .திருமணத்துக்குப் பின் கோபிகா, கணவருடன் அயர்லாந்தில் குடியேறினார்.
திருமணத்துக்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் 2 மலையாள படங்களில் நடித்தார். நடித்து முடித்ததும், அயர்லாந்து சென்று விட்டார். இந்நிலையில், ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக கோபிகா சென்னை வந்தார். அயர்லாந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கோபிகா கூறுயது : திருமணத்துக்குப்பின், நடிப்பதில்லை என்ற முடிவுடன் தான் இருந்தேன். என் நண்பர்களும், நலம் விரும்பிகளும் கேட்டுக்கொண்டதால், 2 மலையாள படங்களில் மட்டும் நடித்தேன். கடந்த முறை நான் கேரளா வந்திருந்தபோது, ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அதற்காகத்தான் நான் சென்னை வந்தேன். அயர்லாந்தில், நான் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் என்னிடம் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொள்கிறார். இப்போது நான், 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். குழந்தையின் நலம் கருதி, இனிமேல் 2 வருடங்களுக்கு பிறகுதான் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என கூறியுள்ளார்.