தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
நடிகை ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், அறிமுகமானபோது, இவர், கோலிவுட்டில், பெரிய ரவுண்டு வருவார் என, பலரும் கூறினர். ஆனால், சிறிய ரவுண்டு தான் வந்தார். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் கிடைக்காததால், பின்னணி பாடுவதில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின், விஸ்வரூபம் படத்தில் தலை காட்டினார். ஆனால், அந்த படத்தில், கமலுடன் சேர்ந்து, அங்கும் இங்கும் ஓடுவாரே தவிர, முக்கியத்துவமான காட்சிகள் எதுவும் அவருக்கு இல்லை.
இந்நிலையில், விஸ்வரூபம் –2 படத்தில், அவருக்கு அதிக காட்சிகள் உள்ளதாம். இதைத் தொடர்ந்து, அவர் நடிக்கவுள்ள, தரமணி என்ற படத்திலும், அவரை மையமாக வைத்து தான், படத்தின் கதையே நகர்கிறதாம். இதனால், இந்த படங்களுக்கு பின், ஆண்ட்ரியாவின் பக்கம், அதிர்ஷ்ட தேவதையின் பார்வை திரும்பும்என, கோலிவுட்டில் கொளுத்திப் போட்டுள்ளனர். ஆண்ட்ரியா, இனி அசத்துவாரா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.