ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வருகிற தீபாவளியன்று ரிலீசாவதும் உறுதியாகி இருக்கிறது. தற்போது ரஜினி கோச்சடையானின் தெலுங்கு வெர்சனுக்கு தெலுங்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோச்சடையான் தெலுங்கு படத்திற்கு விக்ரமசிம்ஹா என்று பெயர் வைத்திருப்பதாக படத்தின் டைரக்டர் சவுந்தர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விக்ரமசிம்ஹா ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். அவனது சரித்திரமும், கோச்சடையான் கதையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடவும் சவுந்தர்யா திட்டமிட்டிருக்கிறார். ரஜினியை அடுத்து படத்தில் நடித்திருக்கும் சரத்குமார், நாசர், ருக்மணி, ஆகியோரும் தெலுங்கு டப்பிங் பேச இருக்கிறார்கள். தீபிகா படுகோனேவுக்கு மட்டும் இன்னொருவர் டப்பிங் பேச இருக்கிறார்.