‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருநங்கை ரோஸ் கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டுவண்டி டுவண்டி கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்களைப் புட்டு புட்டு வைக்கும் படம். இதில் வரும் ஹீரோ கிஷன் ஒரு கிரிக்கெட் கேப்டன். ஹீரோயின் ரோஸ் ஒரு கிளப்டான்சர் கம் திருநங்கை. இருவருக்கும் இடையில் லவ் வருகிறது. கிரிக்கெட் ஊழலை இவர் சொல்ல, திருநங்கை பிரச்னைகளை அவர் சொல்ல படம் இரண்டு தரப்பு உண்மைகளையும் சொல்லப்போகிறதாம்.
தீபன் என்ற நியூபேஸ் மியூசிக் போட்டிருக்கிறார். இதில் லேட்டஸ்ட்டாக கானா பாட்டில் பட்டைய கிளப்பி வரும் கானா பாலா கிரிக்கெட் சூதாட்டம் பற்றி ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார். அந்த பாட்டின் பல்லவி இது...
"டாச போட்டு கிரவுண்டுல ஓட விட்டான்
பொண்ணுங்கள ஸ்கர்ட்போட்டு மேடையில ஆடவிட்டான்
உலக கோப்பை வாங்கித்தான் வீட்டுல வச்சான்
ஊராவூட்டு பசங்களத்தான் மார்கெட்டுல ஏலம் விட்டான்..."
பல்லவியே இப்படி இருந்தா பாட்டு எப்படி இருக்கும்னு கேட்டுப் பாருங்க. யூ டியூப்ல வந்தாச்சு. முதல்ல ஆங்கிலத்தில் மட்டுமே படத்தை டைரக்ட் செய்த ரோஸ் படத்துக்கு கிடைத்து வரும், ஆதரவு, எதிர்ப்பு, மிரட்டல் இவற்றைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் ரிலீஸ் பண்ணப்போகிறார். இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை இயக்கிய திருதங்கை என்ற பெயரும் ரோஸ்சுக்கு கிடைத்திருக்கிறது.