Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்

12 ஆக, 2013 - 14:50 IST
எழுத்தின் அளவு:

வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான்.

"நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன். இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகதில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள் குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை. 750 படங்களுக்கு இசையை அப்படித்தான் அமைத்திருக்கிறேன்.

இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது. இசை அமைப்பின் வேலைகளை கம்ப்யூட்டர் செய்து விடுவதால் இசை அமைப்பாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். அன்று நான் அரை மணிநேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்த பாடலை இன்று ரீகிரியேட் செய்ய இரண்டு நாட்கள் ஆகிறது. இப்போதுள்ளவர்கள் இது எப்படி அன்று உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதுவாக வந்தது, நான் உங்களுக்குத் தந்தேன். இது இறைவன் தந்தது வேறென்ன சொல்ல என்றார்.

Advertisement
கருத்துகள் (97) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (97)

kuchipudi gumma - chennai,இந்தியா
18 ஆக, 2013 - 11:50 Report Abuse
kuchipudi gumma தட்டி பார்த்தேன் கொட்டன்கிசீ , தாளம் வந்தது பாட்ட வெச்சி இதுதான் யதார்த்தம் இளையராஜா அவர்களே
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
18 ஆக, 2013 - 10:30 Report Abuse
Venki Raja உன் இந்தே திமிர்தான் தமிழ்லில் படம் இல்லாமல் பொட்டியே தூக்கி கொண்டு நாடு நாட ஓடிக்கொண்டு இருகிறாய் உனக்கு நாக்கில் சனித்தான் ....
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
15 ஆக, 2013 - 20:16 Report Abuse
JAIRAJ அதிகமாக அலப்பறை செய்வது நல்லதல்ல. எல்லோரும் திறமை சாலிகள்தான் சதவிஹிதத்தில் தான் வேற்றுமை. இளையராஜாவுக்காக அடுத்தவர் சவால் விட்டால் அது சரியாக இருக்கும். தனக்குத்தானே சவால் விட்டுக்கொண்டு அலைவது அலம்பல் செய்வது தன தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்வதுபோல் உள்ளது. டைடானிக், ஜுராசிக்பார்க்,அனகோண்டா ஆகியவைகளை பார்த்த பின்புமா இந்த ஆணவம். அவர்களெல்லாம் மூன்றுவருடமா எடுத்துக் கொண்டார்கள். தங்கள் இசையமைப்பை உலகம் என்றும் மறக்காது.இந்த சவாலெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. யாராவது சவாலை ஏற்று வெற்றிபெற்றுவிட்டால் ...............அடக்கத்துடன் இருப்பது நல்லது. மேலும், பிரியா வந்து முப்பது வருடம் ஆகின்றது. அன்றைக்கு உள்ளதுபோல் இன்றும் தகரடப்பவை உருட்டி விட்டு ரீ ரிக்கார்டிங் செய்ய மாட்டார்கள். திறமையுள்ள இளையராஜாவே, படிப்படியாக திறமையை அதிகரித்துக்கொண்டு இன்றும் இசைக்காக மதிக்கப்பட்டு கொண்டாடப்படும் நீங்கள்,மதிப்பபை இழக்க வேண்டாம்.1965 லிருந்து அன்னக்கிளி கைகொடுக்கும் வரை தங்கள் நிலை என்ன? படிப்படியாக ஏறிவந்த நீங்கள் கவிழ்ந்து விடவேண்டாம். ஒன்றிற் சிறியார் ஒன்றிற் பெரியார் என்பதை மறக்கவேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்கவும்.
Rate this:
appu - madurai,இந்தியா
15 ஆக, 2013 - 14:42 Report Abuse
appu ஐயா மாபெரும் இசை கடவுளே...இசை உலகமே....இசை சங்கமமே....இன்னிசையே....மெல்லிய மெலடியே.....சுகமான ராகமே...வாய் குசும்பை கொஞ்சம் அடக்குவது உமக்கு மேலும் பெருமை சேர்க்கும்...
Rate this:
Common Man - Madurai,இந்தியா
14 ஆக, 2013 - 22:52 Report Abuse
Common Man சரியாக சொன்னீர்கள் ராசா??? M K தியாகராஜ பாகவதர் காலத்தில் electronic keyboard என்ற ஒன்று இல்லை, விஸ்வநாதன் / ராமமூர்த்தி, K V மகாதேவன் காலத்தில் நீங்கள் பயன்படுத்திய இசை கருவிகள் இல்லை. அப்போ அவர்களின் இசையை பற்றி என்ன சொல்வது ??? சிலர் பள்ளிகூடத்திற்கு நடந்தே சென்று படித்தனர், உண்ணும் சிலர் சைக்கிள்களில் சென்று படித்தனர் - அதற்காக நடந்து சென்று படித்ததுதான் உயர்ந்தது என்று சொல்ல முடியுமா ??? ஒரே ஒரு கேள்வி - உங்களோடு பணியாற்றிய ஜாம்பவான்கள் (ரஜினி, கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், வைரமுத்து, பாக்யராஜ்) எல்லாம் ஏன் ஒரு கட்டத்திற்கு பிறகு உங்களை விட்டு வேறு இசைஅமைப்பாளர்களை தேடி சென்றார்கள் ??????
Rate this:
மேலும் 92 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in