இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
அருந்ததிக்கு பிறகு தமிழில் அதிக படங்களில் நடித்த அனுஷ்கா, பல ஹீரோக்களுடன் நடித்தபோது இதுவரை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்தார். ஆனால் இப்போது அவரையும் ஆர்யாவுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரவியுள்ளது. இதுகுறித்து இரண்டுபேருமே எந்த மறுப்பும் சொல்லாததால் செய்திகள் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது.
இதுபற்றி கோலிவுட்டில் கூறும்போது, இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோதே அவர்களுக்கிடையிலான நெருக்கம் ஜாஸ்தியாகி விட்டது. காரணம், இரண்டாம் உலகம் படப்பிடிப்பு ஜார்ஜியா காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது, யூனிட்டுடன் அங்கு சென்ற ஒரேயொரு பெண் அனுஷ்கா மட்டுமே. அதனால் அவர் தனியே இருக்கும்போது அடிக்கடி கம்பெனி கொடுத்து வந்திருக்கிறார் ஆர்யா. அப்படி ஏற்பட்ட பழக்கம்தான் இப்போது வேரூன்றி விட்டதாம்.
அதனால்தான் இதுவரை சினிமா பார்ட்டிகளில் வந்தால் அடக்க ஒடுக்கமாக இருந்து விட்டு வெளியேறிய அனுஷ்கா, சமீபத்தில் சிங்கம்-2 பார்ட்டியில் ஆர்யாவுடன் கைகோர்த்து கொண்டு கட்டிப்புடி நடனமெல்லாம் ஆடி அமர்க்களப்படுத்தினார். இதுவரை எந்த மொழி நடிகர்களுடனும் இப்படி ஆடாத அனுஷ்கா, ஆர்யாவுடன் மட்டும் ஆடுகிறார் என்றால் அவர்களுக்கிடையே காதல் பத்திக்கொண்டிருப்பதுதான் என்கிறார்கள்.
ஆனால், இன்னும் சிலரோ, அனுஷ்காவுடன் மட்டுமல்ல, ஆர்யாவுக்கு மூடு வந்து விட்டால் எந்த நடிகை சிக்கினாலும் ஆட்டம் போடும் ஜாலியான நடிகர். அதனால், இதை வைத்தெல்லாம் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாக சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள்.
இதில் எது உண்மையோ, ஆர்யா-அனுஷ்காவுக்கே வெளிச்சம்...!