காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்ஸாடா. அதன்பிறகு தனுஷ் உடன் 'பட்டாஸ்', வசந்த் ரவியின் 'இந்திரா' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன், பவ்யா பிஷ்னோயுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் திருமணம் நடக்கவில்லை. இந்த நிலையில் அவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு அவருடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து மெஹ்ரின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது : கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற வதந்திகள் என்னைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் மவுனமாக இருந்தேன். ஆனால் தொடர்ச்சியான தொல்லைகள் காரணமாக இப்பதிவை எழுதுகிறேன்.
யாரோ முகம் தெரியாத ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டதாகப் போலியான தகவல்கள் வெளியானது. அதன் மூலம் இரண்டு நிமிடப் புகழைத் தேடிக்கொள்ள முயன்ற மோசமான நபரின் வேலை அது.
எனக்கு யாருடனும் திருமணம் ஆகவில்லை. நான் திருமணம் செய்ய முடிவு செய்யும் போது, இந்த உலகம் அறியும் வகையில் நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். என் சமூக வலைத்தள பக்கத்தை யாரோ தொடர்பில்லாத நபர்கள் திருத்த அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். என் சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்களுக்கு நானே ஆதாரம் என்று தெரிவித்துள்ளார்.




