ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
பஞ்சாப்பை சேர்ந்த மெஹ்ரின் பிரதிஸ்டா தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 'பட்டாஸ்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். அதன்பிறகும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது 3 வருடங்களுக்கு பிறகு வசந்த் ரவி ஜோடியாக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கும் நேரத்தில் படத்தின் டைட்டில் 'இந்திரா' என்று அறிவித்துள்ளனர். இந்திரா கேரக்டரில் மெஹ்ரின் நடிக்கிறார். ஜெ.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்பான் மாலிக் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, நவரசா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சபரீஷ் நந்தா இயக்குகிறார். அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.