ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தலைவா. நடனப்பள்ளி நடத்துபவராக இதில் நடித்துள்ள விஜய், ஒரு கட்டத்தில் தாதாக்களுடன் மோதுகிறாராம். அதன்பிறகு மக்களால் அவர் தலைவனாக்கப்படுவதுதான் கதையாம். அமலாபால் விஜய்க்கு ஜோடியாகியுள்ள இப்படத்தில் சந்தானம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதிகட்டப்பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இருப்பினும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்ப பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளதாம். இதற்கிடையே சென்சாருக்கும் படம் அனுப்ப வேண்டியுள்ளதால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9-ந்தேதி தலைவா ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 15-க்கு மாற்றி, சுதந்திர தினத்தில் தலைவாவை ரிலீஸ் செய்யும் ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.