ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தனுஷ் நடிப்பில் கடந்த 2023ல் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழி படமாக வெளியானது வாத்தி திரைப்படம். தனுஷ் முதன் முதலில் தெலுங்கில் நடித்த இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும் லாபகரமான படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் லக்கி பாஸ்கர் என்கிற வெற்றி படத்தை கொடுத்த வெங்கி அட்லூரி அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் அவரது 46வது படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது வாத்தி படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் அல்ல என்கிற புதிய தகவலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “வாத்தி கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிப்பதாகத்தான் கதையை எழுதி இருந்தேன். அவரிடம் சொன்னபோது கதை பிடித்து இருக்கிறது. ஆனால் சில மாதங்கள் வரை என் கால்சீட் இல்லை. அதே சமயம் எனக்காக காத்திருங்கள் என்றும் சொல்ல மாட்டேன். வேறு வாய்ப்பு வந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் அந்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த விஷயத்தை ரவி தேஜாவிடம் சொன்ன போது தனுஷ் மிகப்பெரிய ஹீரோ. கவனமாக பார்த்து செய்யுங்கள் என்று கூறினார். படம் வெளியான பிறகு படத்தை பார்த்துவிட்டு நான் இதில் நடித்திருந்தால் என் கதாபாத்திரத்தை வேறு மாதிரி செய்திருப்பேன் என்று கூறினார் ரவிதேஜா” என்று வெங்கி அட்லூரி கூறியுள்ளார்..