ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை தொடர்ந்து படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பிரமாண்ட நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து இந்தாண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். முதல்பாகத்தில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் கதைகளத்தை கொடுத்த கமல்ஹாசன், இரண்டாம் பாகத்தை இந்தியாவை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார்.
இந்நிலையில் இப்போது படத்தின் டிரைலரை சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ளார் கமல். டிரைலரை வெளியிட்டு கமல் பேசியதாவது, பாலிவுட்டில் விஸ்வரூபம்-2 டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஸ்வரூபம் படத்தை காட்டிலும் விஸ்வரூபம்-2 இன்னும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாகத்தில் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்படும், விஸ்வரூபம்-2வில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
விஸ்வரூபம் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். தற்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீஸாகும் என தெரிகிறது.