ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
சுஜித் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பவன் கல்யாண், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'ஓஜி'. இப்படம் முதல் நாளில் 154 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதற்கடுத்த நாட்களிலும் இப்படத்திற்கான வரவேற்பு அப்படியே உள்ளது. முதல் நாளில் ஆந்திரா, தெலுங்கானாவில் ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்பட்டது. அதனால், முதல் நாள் வசூல் அவ்வளவு இருந்தது. அடுத்த நாட்களில் தியேட்டர்கள் குறைந்ததால் வசூலும் குறைந்தது. இருந்தாலும் மூன்றே நாட்களில் இப்படம் 200 கோடி வசூலைக் குவித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பவன் கல்யாண் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் இந்த 'ஓஜி' படம்தான் முதல் முறையாக 200 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2022ல் வெளிவந்த 'பீமலா நாயக்' படம் 160 கோடி வசூலித்ததே அவரது அதிகபட்ச வசூல் படமாக இருந்தது.