கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை'. டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு என அடுத்தடுத்து பட புரொமோஷன்களில் பங்கேற்றார் தனுஷ். தொடர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அக்டோபர் 1ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் இப்போது தணிக்கை சம்மந்தப்பட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர். இந்த படத்தில் எந்தவொரு ஆக்ரோஷமான, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெறாததால் தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.




